சாரதி பயிற்சிப் பாடசாலைகளை கண்காணிக்க வேலைத் திட்டம்!

Monday, February 11th, 2019

நாடு முழுவதுமுள்ள வாகன சாரதிப் பயிற்சிப் பாடசாலைகளை கண்காணிக்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் இதைச் செயற்படுத்துகின்றது.

இதற்காக 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பதிவு செய்யப்படாத வாகன சாரதி பயிற்சிப் பாடசாலைகளுக்கு எதிராக ஒரே முறையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது. இருப்பினும் பெரும் பிரச்சினை ஏற்படுமாயின் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: