சாரதி அனுமதி பத்திர தயாரிப்பு நிலையம் முற்றுகை!

போலி சாரதி அனுமதி பத்திர தாயாரிப்பு நிலையம் ஒன்று மாத்தறை அக்குறுகொட பகுதியில் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
முற்றுகையிடப்பட்டுள்ள குறித்த நிலையத்திலிருந்து பிறப்பு சான்றிதழ்கள், போலி தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர், சாரதி அனுமதி பத்திரம் மற்றும் தொழில் வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி மாத்தறை, வெலிகொட, நிஹகொட, அஹங்கம மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் பலரிடம் நிதி மோசடி செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
|
|