சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு இரத்த பரிசோதனை இல்லை – போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!
Saturday, September 12th, 2020சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பிரதான கண்பரிசோதனையே மேற்கொள்ளப்படும். சகலருக்கும் எக்ஸ் ரே கதிர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு செலவிடும் பணத்தை சேமிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் காலங்களில் சீனி மற்றும் குறுதி அழுத்தங்கள் தொடர்பான சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆனாலம் இது நபரொருவர் சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதில் எந்த தாக்கத்தையும் செலுத்தாது என்றும் அவர்களுக்கு அறியப்படுத்துவதற்காக மாத்திரமே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|