சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு!

Tuesday, March 13th, 2018

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துமூல பரீட்சை எதிர்வரும் மே மாதம் முதல் கணினிமயப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தப் பரீட்சை செயன்முறை குறித்து போக்குவரத்துத் திணைக்களத்துக்கு தாம் அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 3 ஆம் திகதி கணினிமயப்படுத்தப்பட்ட பரீட்சையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திணைக்கள ஆணையாளர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாளாந்த அடிப்படையில் கணினிமயப்படுத்தப்பட்ட புதிய வினாக்கள் தாமாகவே இயற்றப்பட்டு முடிவுகளையும் உடனுக்குடன் அறிவிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவ அறிக்கைகளையும் புதிய முறையில் வெளியிடுவது குறித்தும் தாம் அவதானம் செலுத்தி வருவதாகவு போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: