சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிவரை நீடிப்பு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Friday, August 13th, 2021

சாரதி அனுமதிப்பத்திர காலாவதி திகதி இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர மற்றும் நாரஹேன்பிட்டி அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை 16ஆம் திகதிமுதல் 07 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளதாகவும் திலும் அமுனுகம மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாகமும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரம் எதிர்வரும் 31ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: