சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு காலவகாசம் – மோட்டார்வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு !

செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் பட்சத்தில், புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான நிவாரண காலமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் விரைவில் அறிவிக்கவுள்ளதாக மோட்டார்வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சந்தன குறிப்பிட்டுள்ளார்.
செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான புதிய அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கான செயன்முறை பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், கொரோனா தொற்று காரணமாக சில மாவட்டங்களில் குறித்த செயன்முறை பரீட்சைகளுக்கு தடைகள் ஏற்பட்டுள்ளதாக மோட்டார்வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சந்தன தெரிவித்தார்.
இதனால் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் நிலைமைகளை கருத்திற் கொண்டு, தகுந்த நடைமுறைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|