சாரதிகளை பாதிக்கும்  புதிய சட்டங்கள் தொடர்பில் வருகின்றது வர்த்தமானி !

Tuesday, October 17th, 2017

சாரதிகளினை பாதிக்கும் வகையில் மேலும் 03 புதிய சட்டங்கள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படவுள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

அதன்படி மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களது நலன் கருதிய சிறந்த தரத்திலான தலைக்கவசம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் முச்சக்கரவண்டி செலுத்துகையில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 40KM  வரையிலான வேகக் கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து தவறுகள் 05க்கு 25000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படல் குறித்த வர்த்தமானி அறிவித்தல்களே இவ்வாறு வெளியிடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts: