சாரதிகளுக்கு விபத்து சார்ந்த பயிற்சிகள்!

வடக்கு மாகாண திணைக்களங்களில் கடமையாற்றும் சாரதிகளுக்கு 4 நாள் விபத்து சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக பிரதி முதன்மை ஆளணியும் பயிற்சியும் பிரிவு தெரிவித்துள்ளது.
திணைக்களங்களில் கடமையாற்றும் சாரதிகள் சில அடிப்படை விடயங்களை தெரிந்திருப்பது கட்டாயமானது. அப்போதுதான் விபத்துக்கள் போன்ற திடீர் நிலைமைகளில் அனைவரையும் பாதுகாக்க முடியும். இதனை அடிப்படையாகக் கொண்டு பிரதி முதன்மை செயலரின் ஆளணியும் பயிற்சியும் பிரிவின் ஏற்பாட்டில் 4 நாள்களைக் கொண்ட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
முதலுதவி திடீர் விபத்து இயந்திர முகாமைத்துவம் போன்ற பயிற்சிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 30 தொடக்கம் 40 பேர் கொண்ட அணியினருக்கும் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
ஜனாதிபதியிடம் தீர்வுகோரும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
அரசாங்கத்தின் நிதி முதன்மை கணக்கில் 21.9 பில்லியன் ரூபா மேலதிகம்!
சிறிய வாகனங்களின் விலை ஒன்றரை இலட்சம் ரூபாவினால் அதிகரிப்பு!
|
|