சாரதிகளின் கண் பார்வையைப் பரிசோதிக்கத் திட்டம்!

Friday, November 11th, 2016

பாடசாலை சேவையில் ஈடுபடுகின்ற வாகனங்கள் மற்றும் பயணிகள் பேருந்துகளின் சாரதிகளின் கண் பார்வையைப் பரிசோதிக்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கண் பார்வை குறைபாடுகள் காரணமாக அதிகளவில் விபத்துக்கள் இடம்பெறுகின்றமை தெரியவந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, பாடசாலை சேவையில் ஈடுபடுகின்ற வாகனங்கள் மற்றும் பயணிகள் பேருந்துகளின் சாரதிகளை கண்பார்வை பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.வைத்தியசாலைகள் மட்டத்தில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

eye-check-up-1

Related posts: