சாதாரண தர மாணவர்களுக்கு ஜனவரி முதலாம் திகதிமுதல் கற்றல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, September 3rd, 2020

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதிமுதல் 17ஆம் திகதி வரை க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு கற்றல் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் ஜனவரி 18ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 27ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த காலப்பகுதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படும்.

க.பொ.த சாதாரண தரத்தின் பின்னர் பெப்ரவரி முதலாம் திகதிமுதல் மீண்டும் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, 2020 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை – ஒக்டோபர் 11 ஆம் திகதியும், க.பொ.த உயர் தரப் பரீட்சைகள்  ஒக்டோபர் 12 ஆம் திகதிமுதல் நவம்பர் 06 வரையும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள்  ஜனவரி 18 ஆம் திகதிமுதல் ஜனவரி 27 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு அயிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் ஒக்டோபர் 10 ஆம் திகதிமுதல் நவம்பர் 8 ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அத்துடன் மூன்றாம் தவணை நவம்பர் மாதம் 9 ஆம் திகதிமுதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரையும், ஆண்டு இறுதி விடுமுறை டிசம்பர் 24 முதல் 2021 ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி வரை வழங்கப்பட்டள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts: