சாதாரண தர பரீட்சைக்கு முன்உள்ளூராட்சி தேர்தல்?

Thursday, August 31st, 2017

நாளை உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பம் இடுவாரென சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சபாநாயகர் கையொப்பமிடுவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய ஏனைய நடவடிக்கைகளை துரிதமாக பூர்த்தி செய்யுமாறு சபாநாயகர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அலோசனை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலம் கடந்த 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுடன், இதற்கு ஆதவாக 120 வாக்குகள் கிடைத்ததோடு, எதிராக எவரும் வாக்களித்திருக்கவில்லை. 2012ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் கடந்த ஜூன் 20ஆம் திகதி மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

செப்டம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சட்டத்தை நிறைவேற்றினால் சாதாரண தர பரீட்சைக்கு முன்னர் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: