சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இணையத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Saturday, July 25th, 2020

2020 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் இணையத்தளத்தினூடாக மாத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அத்துடன் விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள www.doenets.lk (onlineexams.gov.lk/onlineapps) என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வருடம் கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

உரிய வழிமுறைகளை கவனமாகப் படித்து அதன்படி விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான வழிகாட்டல்கள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்ப்பட்டுள்ளது, இதுதொடர்பான விபரங்கள் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோன்று தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான வழிகாட்டல்களும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவங்களை online யில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் பகுதியை பிரதியெடுத்து, அதில் மீதமுள்ள பகுதிகளை பூர்த்தி செய்து தபால் மூலம், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும். இதுதொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

Related posts: