சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Monday, January 22nd, 20242023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் அடுத்த மாதம் 15 திகதி வரை நிகழ்நிலை முறைமை ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளபடும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, சகல பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறைமையிலும் உரிய அறிவுறுத்தல்களுக்கமைய நிகழ்நிலை முறைமை மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் முதல், கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக விண்ணப்பிக்கவுள்ள சகல தனிப்பட்ட பரீட்சார்த்திகளிடமும் தேசிய அடையாள அட்டை இருப்பது கட்டாயமானதாகும்.
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணைத்தளமான www.doenets.lk என்ற இணைத்தளம் ஊடாக விண்ணப்பங்களை பிழையின்றி சமரப்பிக்குமாறு பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் இருப்பின் 011 27 84 208 என்ற தொடர்பு இலக்கத்திற்கோ அல்லது 011 27 84 537 இலக்கதிற்கோ அழைக்க முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதேநேரம், gceolexams@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பினை ஏற்படுத்தி விண்ணப்பங்கள் தொடர்பான விளக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
|
|