சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் செவ்வாயன்று வெளிவரும்!

Monday, March 27th, 2017

2016ஆம் ஆண்டு டிசெம்பெர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செவ்வாய்க்கிழமை (27)  வெளியிடப்படும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அன்றைய தினத்தில் பரீட்சார்த்திகள், இணையத்தின் மூலம் தங்களது பெறுபேறுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, 5,669 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சை, எதிர்வரும் டிசெம்பெர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகி டிசெம்பெர் 21ஆம் திகதி முடிவடையவுள்ளது.

இவ்வாண்டின் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை, ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பெர் 02ஆம் திகதி முடிவடையும்.இந்தப் பரீட்சையின் முடிவுகள் டிசெம்பெர் மாதம் 27ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தப் பரீட்சை முடிவுகள், ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts: