சாதாரண தரப் பரீட்சைக்கு 650, 641 பேர் தோற்றவுள்ளனர்!

இவ்வருடம் நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 50 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.பிரகாசன் தெரிவித்தார்.
சாதாரணப் பரீட்சைக்கு 422,850 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 233,791 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர். இப்பரீட்சையானது 4,661 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. பரீட்சைக்காக 541 இணைப்பு நிலையங்களும் 33 பிராந்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
விசேட பரீட்சை நிலையங்களாக இரத்மலான, தங்கல்ல, சிலாபம் மற்றும் சிறைச்சாலைகள், வைத்தியசாலைகளிலும் பரீட்சை ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
Related posts:
கையடக்கத் தொலைபேசி பாவனை - தென்னாசியாவிலேயே இரண்டாம் இடத்தை பிடித்தது இலங்கை!
உத்தியோகபூர்வ சாரதி அனுமதி அட்டைகள் இன்றுமுதல் வழங்கப்படும் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவி...
பாதுகாப்பு படைகளின் பிரதானியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு!
|
|