சாதாரண தரப் பரீட்சார்த்திகளினி அனுமதி அட்டைகள் அனுப்பி வைப்பு!

Wednesday, November 23rd, 2016

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் நுழைவுச் சீட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் வாரம் ஆரம்பத்தில் பரீட்சை நுழைவுச் சீட்டுக்கள் கிடைக்காவிட்டால் 0112784537 – 0112784208 அல்லது 1911 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்ப மாதம் 6ம் திகதி முதல் 19ம் திகதி வரையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.சாதாரண தரப் பரீட்சைக்கு இம்முறை சுமார் ஏழு லட்சம் பரீட்சார்த்திகள் தோற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது

7472f7a54453f0433f88d446c7dad0f4_XL

Related posts: