சாதாரண சேவைகள் இதுவரை தொடங்கப்படவில்லை – தபால் சேவைகள் தொடர்பில் அஞ்சல் மா அதிபர் தகவல்!

Tuesday, June 8th, 2021

அஞ்சல் சேவையின் சாதாரண சேவைகள் இதுவரை தொடங்கப்படவில்லை என்று அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, அனைத்து அஞ்சல் ஊழியர்களையும் சேவைக்கு அழைக்க முடியாது, எனவே தெரிவு செய்யப்பட்ட சில சேவைகள் மட்டுமே செயற்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் சாதாரண அஞ்சல் விநியோகம் மற்றும் முத்திரை வழங்கல் போன்ற சேவைகளை மேற்கொள்ள போதுமான ஊழியர்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, ஓய்வூதியம் செலுத்துதல் மற்றும் மருந்துகள் விநியோகம், சிறப்பு மற்றும் சர்வதேச பார்சல்களை விநியோகித்தல் உள்ளிட்ட கூரியர் சேவைகள் தற்போது செயற்பாட்டில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: