சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

கொரோனா தடுப்பூசியை முதற்கட்டமாக, கல்வி பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு செலுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து, சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
எனினும், தடுப்பூசி வழங்கும் சரியான திகதி இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை, எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அமைச்சின் புதிய செயலாளர்கள் நாளை நியமனம்!
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது!
ஞாயிரன்றே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித்தீர்மானம் - கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ...
|
|