சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விசேட மீளாய்வு!

Monday, February 6th, 2017

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள், மற்றும் வினாத்தாள்கள், தொடர்பில் விசேட மீளாய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

2016 ஆண்டில் பரீட்சைக்கு தோற்றியோரின் பெறுபேறுகள் தொடர்பிலேயே இவ்வாறான மீளாய்வினை மேற்கொள்ளவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் wmnj புஸ்பகுமார தெரிவித்துள்ளார். சாதாரணதர பரீட்சைக்கு தோன்றியோரின் வினாத்தாள்களை திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலதிகமாக திருத்தப்பணிகளுக்கு ஆசிரியர்களை உள்வாங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஆய்வுகளை மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக 70,000 மாணவர்களின் வினாத்தாள்களிலேயே ஆள்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

examLogText

Related posts: