சாணக்கியனின் ஊழல் குறித்து வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிவரும் – ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராஜா சுட்டிக்காட்டு!

Thursday, August 10th, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து  நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ” சாணக்கியன் தனது வேட்டியை ஒவ்வொரு இடமாக வீசி தற்போது சூறை முள்பத்தையில் வீசியுள்ளதாகவும் அதன் தாக்கம் இனி அவருக்கு தெரியவரும்” எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

போராட்டத்தைப்பற்றியும் அதன் வலி பற்றியும் தெரியாத அவருக்கு  தமது கட்சியை விமர்சிப்பதற்கு எந்த அருகதையும் இல்லையெனவும் அமைப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கோண்டாவில் இந்து விளயாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் பங்கேற்று சிறப்பிப்பு!
யாழ்ப்பாணத்தில் மேலும் 48 பேருக்குக் கொரோனா தொற்று - கொடிகாமத்தில் மட்டும் 24 பேர் இனங்காணப்பட்டதாக ...
முச்சக்கரவண்டி மாபியாவுக்கு முற்றுப்புள்ளி - மீட்டர் முறையை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் தீவிர...