சாட்சியமளிக்க மாட்டேன் – தெரிவுக்குழு தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு!

Wednesday, June 26th, 2019

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்க வருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், அழைப்பு விடுக்கப்பட்டாலும் அதில் முன்னிலையாகமாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அது அலரி மாளிகையில் உருவாக்கப்பட்ட நாடகம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை அடுத்த ஜனாதிபதியாக யார் தெரிவானாலும் 19வது திருத்தம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் , அது நாட்டின் சாபக்கேடு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சோபா உடன்படிக்கைக்கு தான் முற்றிலும் எதிரானவர் என்றும், அது வெளிநாட்டு படைகளை நாட்டிற்குள் வரவழைக்கும் ஆபத்து எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: