சவுதி அரேபிய விமானநிலையம் மீது டிரோன் தாக்குதல் – இலங்கையர்கள் உட்பட 12 பேர் காயம்!

சவுதி அரேபியாவின் விமானநிலையம் மீது இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதலில் இலங்கையர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.
யேமன் சவுதி அரேபியா எல்லையில் உள்ள விமானநிலையமொன்றை இலக்குவைத்து ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆளில்லாம விமானதாக்குதலின் போதே இவர்கள் காயமடைந்துள்ளனர்.
சவுதி அரேபிய படையினர் வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை வானிலேயே வெடிக்கவைத்தனர் அதன்சிதறல்கள் காரணமாக இலங்கையர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை பங்களாதேஸ் இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் காயமடைந்;துள்ளனர்.
தங்களிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகக்காக பயன்படுத்தப்பட்ட விமான நிலையத்தை இலக்குவைத்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
000
Related posts:
யால தேசிய பூங்கா மூடப்பட்டது!
கொரோனா அச்சத்தால் முடக்கப்பட்ட அனலைதீவு ,காரைநகர் பிரதேசங்கள் முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டன - ...
ஜனவரிமுதல் 06 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்ம் - அமைச்சர் பந்துல குண...
|
|