சவுதி அரேபியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை 48 மணி நேரத்தில் மீண்டும் நாட்டுக்கு அழைதது வர ஜனாதிபதி நடவடிக்கை!

சவுதி அரேபியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைதது வர ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி சவுதி அரேபியாவில் 150 இடங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டுக்கு அழைத்து வர உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவின்படி நாள் ஒன்றுக்கு இரண்டு விமானங்களில் இலங்கையர்களை அழைத்து வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட்- 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் மற்றும் சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்கள் விடுதிகளில் தங்கியிருப்போர் மற்றும் பணிப்புரிவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தபாலகங்களுக்கு மோட்டார் சயிக்கிள்கள் விரைவில் வழங்க நடவடிக்கை!
சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவு!
காணாமற்போன நெடுந்தீவு மீனவர் வேதாரணியம் கடற்கரையில் சடலமாக மீட்பு!
|
|