சவுதி அரேபியாவினால் 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு நன்கொடை!

Tuesday, February 1st, 2022

சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கை சமூகத்துடன் இணைந்து இலங்கை கலாசார மன்றம் இந்த மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

உற்பத்தி, வழங்கல் மற்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி. ஆர்.எம்.எஸ். ரத்நாயக்க ஆகியோரிடம் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இந்த நன்கொடையைக் கையளித்தார்.

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதுவர் பி.எம். அம்சா மற்றும் தூதரக ஊழியர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உதவியுடன் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்ததாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: