சவுதிக்கு பதிலாக வேறு தொழில் சந்தை – அமைச்சர் தலதா அதுகோரல!
Monday, August 8th, 2016
சவுதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
இதனால் சவுதி தொழில்களுக்கு பதிலாக வேறு தொழில் சந்தை தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சவுதியில் இலங்கை தொழிலாளர்கள் 12 பேருக்கு தற்போதைய நிலையில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் , அவர்களுக்கான உணவு மற்றும் பணம் வழங்குதல் சவுதி தூதரகம் மூலம் செய்யப்படுகிறது. அவர்கள் தொழில் புரிந்த நிறுவனங்களால் சம்பளம் வழங்கப்படாதது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதே போல் ரியாத் நகரில் அமைந்துள்ள மேலுமொரு நிறுவனத்தில் சுமார் இலங்கையர்களுக்கு வேலை இழக்கப்படும் அவதானம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 40 பேர் இது தொடர்பில் சவுதி தூதரகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அமைச்சர் இதன் போது தெரிவித்திருந்தார்
Related posts:
|
|