சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சி – அமைச்சர் மங்கள சமரவீர!

Saturday, August 12th, 2017

சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் பாராட்டத்தக்க அளவு முன்னேற்றத்தைப் பதிவு செய்திருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கி அறிக்கை தொடர்பான ஒத்திவைப்புவேளை விவாதத்தில் அமைச்சர் உரையாற்றுகையில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை சரியான முறையில் முன்னெடுக்கும் சவாலை நிதியமைச்சராகப் பணியாற்றிய ரவி கருணாநாயக்க வெற்றிகொண்டார்.ரவி கருணாநாயக்க உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை முன்மாதிரியாகக் கொண்டு கூட்டு எதிர்க்கட்சியினரின் பெரும்பாண்மையான உறுப்பினர்களும் ராஜினாமாச் செய்வது அவசியமாகும்.ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்பட்டமையினால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனை சீர்செய்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் நடைமுறைப்படுத்த நல்லாட்சி அரசாங்கத்தால் முடிந்ததாகவும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: