சவாலான காலங்களில் உதவிய உண்மையான நண்பன் இந்தியா – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சுட்டிக்காட்டு!

Saturday, March 18th, 2023

இலங்கையின் சவாலான காலங்களில், தங்களுக்கு உதவிய உண்மையான நண்பன், இந்தியாவே என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் நேற்று (17) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது, நீரைக் காட்டிலும் இரத்தம் அடர்த்தியானது என்பதை சுட்டிக்காட்டிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையுடன் இந்தியா அவ்வாறான உறவையே கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன், சவாலான காலத்தை கடந்துவந்த போது, உண்மையான நண்பர் யார் என்பதை இலங்கை அறிந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே, குறித்த நிகழ்வில் பங்கேற்ற இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவே இலங்கையின் உண்மையான நண்பன் என்றும், அதனை இலங்கை எப்போதும் மறக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: