சர்வதேச விமான நிலையத்தை திறப்பதில் தாமதம் ஏற்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Monday, June 29th, 2020

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி திறக்கப்படமாட்டாது என சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார தரப்பினரது அறிவுறுத்தலுக்கு அமைய இந்த முடிவு எட்டப்பட்டதாக சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி விமான நிலையத்தை முழுமையாக திறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து, ஓகஸ்ட் முதலாம் திகதி விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருவதற்கு இதுவரையில் பதிவு செய்துள்ளனரெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: