சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்தை பானுகராஜபக்ச கைவிடவேண்டும் – அமைச்சர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள்!

Monday, January 10th, 2022

வீரர்கள் நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் மீண்டும் நடந்துகொண்டால் அவர்களிற்கு வாழ்நாள் தடையை விதிப்பதற்கு நான் தயங்கமாட்டேன் என தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பானுகராஜபக்ச சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வுபெறும் எண்ணத்தை கைவிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இளம் வீரர் என்ற அடிப்படையில் பானுகராஜபக்ச இலங்கைக்காக இன்னமும் நீண்டகாலம் விளையாடலாம் என்பதை சுட்டிக்காட்டியுள்ள நாமல்ராஜபக்ச அவசரப்பட்டு முடிவுகளை எடுப்பதறகு பதிலாக சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி நகர்வது முக்கியம் என தெரிவித்துள்ளார்.

விளையாட்டும் விளையாட்டு வாழ்க்கையும் எந்த வீரருக்கும் சவாலானது- இவர்கள் அனைவரும் தொழி;ல்சார் ரீதியாக விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகவே அவர்கள் அந்த தொழில்சார் தராதரத்தை எப்போதும் பேணவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சுயாதீன அமைப்பாக செயற்படுகின்றது,இந்த அடிப்படையில் சமீபத்தில் நாங்கள் கிரிக்கெட்டை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்கில் அரவிந்த டிசில்வா தலைமையிலான தொழில்நுட்ப குழுவை நியமித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுகுழுவினதும் தொழில்நுட்ப ஆலோசனை குழுவினதும் ஆலோசனையின் அடிப்படையில் முன்னாள் அணித்தலைவர் மகேலஜெயவர்த்தன ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் விளையாடும் எங்கள் அணிவீரர்களுடன் இணைந்து செயற்படுகின்றார்.

இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்கான நீண்டகால திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது அதற்குள் தொழில்நுட்ப திட்டமும் காணப்படுகின்றது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட முறையில் முன்னோக்கி நகர்வது நீண்டகால வெற்றிகளை கொண்டுவரும் – என்பது எனது நம்பிக்கை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்கள் தொழில்சார் கடப்பாடுகளிற்கு மதிப்பளித்தவாறு தனிப்பட்ட காரணங்களிற்காக ஓய்வுபெறுவதற்கு அவர்களிற்கு முழு உரிமையும் உள்ளது,

அவ்வாறான சூழ்நிலையில் ஓய்வுபெறும் முடிவை வீரரே எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரச்சினை அல்லது அநீதி இழைக்கப்பட்hல் அந்த தீர்மானம் நி;ர்வாகத்துடன் தொடர்புபடும் தன்மையை கொண்டுள்ளது ஆனால் ஒரு சில வீரர்களை அடிப்படையாக வைத்து கட்டமைப்பை நீதிகட்டமைப்பை மாற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அவ்வாறு செயற்பட்டால் முழு அமைப்பும் சிதறுண்டுவிடும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வெற்றிக்கான திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதை பார்ப்பதே எனதும் ரசிகர்களினதும் அபிலாசையாகும்.

கிரிக்கெட்டிலும் ஏனைய விளையாட்டிலும் வீரர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஓழுக்கம் குறித்து நான் மிகவும் கண்டிப்பாக உள்ளேன்,

கடந்தகாலத்தில்சிலர் வீரர்கள் அவர்கள் தவறான விதத்தில் நடந்துகொண்டமைக்காக தண்டிக்கப்பட்டார்கள்,தண்டனை காலத்தில் அவர்கள் கிரிக்கெட் மீது வெளிப்படுத்திய மதிப்பு காரணமாக அவர்கள் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,அந்த வீரர்கள் நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் மீண்டும் நடந்துகொண்டால் அவர்களிற்கு வாழ்நாள் தடையை விதிப்பதற்கு நான் தயங்கமாட்டேன் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்தகால கொள்கைகளில் எந்த மாற்றமுமில்லை என்பதை இதன் அடிப்படையில் நான் உறுதியாக தெரிவிக்கின்றேன் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

000

Related posts:

பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் 3 வீதமானவர்களே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்- ஜனாதிபதி ஊடகப்பிரிவு ...
கடந்த 24 மணி நேரத்தில் மட்டு. மாவட்டத்தில் 8 மரணங்கள் - 209 கொரோனா தொற்றாளர்களும் பதிவாதனதாக பிராந்...
விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ...