சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
Wednesday, November 9th, 2022சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர், சர்வதேச பாடசாலைகளில் உள்ள இடம், கிடைக்கக்கூடிய வசதிகள் மற்றும் ஆசிரியர்களின் கல்வித் தகைமைகள் போன்ற ஏனைய அளவுகோல்களை கல்வித் திணைக்களம் கவனிக்கும் என்று குறிப்பிட்டார்.
சர்வதேச பாடசாலைகள் தொடர்பான வேறு எந்த அம்சங்களையும் தாங்கள் கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று அமைச்சர் கூறினார்.
சர்வதேச பாடசாலைகளும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் வருவதால், அந்த பாடசாலைகளில் மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் எந்தவொரு சம்பவத்தையும் இந்த நிறுவனம் கவனிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!
மஹாபொல புலமைப்பரிசில் எதிர்வரும் திங்கட்கிழமை !
இந்தியாவில் இருந்து அமுல் பால் மாவை இறக்குமதி செய்ய நடவடிக்கை - இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அந்நாட்டு ப...
|
|
இலங்கையிலும் ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் - மக்கள் அனாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்...
சேதனைப் பசளை உற்பத்தி விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்தி...
திரைத் துறையில் பணியாற்றும் கலைஞர்களின் நலனுக்காக சிறப்புக் கடன் திட்டம் ஆரம்பிக்கப்படும் - ஜனாதிபதி...