சர்வதேச நீதிபதிகளுகு இடமில்லை – பிரதமர் !

சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் இலங்கையில் உருவாக்கப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை இணைந்து கொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்த அவர் இலங்கையர்கள் சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் ரோம் பிரகடனத்தின் அடிப்படையில் தண்டிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தில் சர்வதேச நீதவான்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நீதவான்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட போதிலும் இலங்கை அந்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ளாது என அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|