சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் தீர்மானம்!

Saturday, June 2nd, 2018

நான்காம் கட்ட மீளாய்வின் பின்னர் இலங்கைக்கு மேலும் 252 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு அனுமதியளிக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.

குறித்த இந்தத் தீர்மானம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாண்டு நீடிக்கப்பட்ட திட்டத்துக்கான அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கமைய, நாணய நிதியத்தினால் இலங்கைக்கு தற்போதுவரை ஆயிரத்து 14 மில்லியன் டொலருக்கும் அதிகமான கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.

Related posts: