சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஆரம்பம் – இந்திய தரப்பினர் சிலரும் பங்கேற்பு என தகவல்!

Monday, April 18th, 2022

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை வொஷிங்டன் சென்றிருந்தனர்.

குறித்த குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்டோரும் அடங்குகின்றனர்.

இதற்கமைய இந்த குழுவினர் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை அங்கு தங்கியிருப்பார்கள். அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள சந்திப்பில் இந்திய தரப்பினர் சிலரும் கலந்து கொள்ளவுள்ளதாக டைம்ஸ் ஒஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு இந்த வருடத்திற்கு, 3 முதல் 4 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம், 3 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கும் என எதிர்ப்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: