சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கையில்!
Saturday, February 16th, 2019சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று கொழும்பு வந்தடைந்துள்ளனர்.
இலங்கைக்கு 260 மில்லியன் ரூபா கடனை தவணைக் கொடுப்பனவாக வழங்குவது குறித்து கலந்துரையாடவென சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இங்கு வந்துள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி திறைசேரி, நிதியமைச்சு என்பனவற்றின் அதிகாரிகளுடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள்.
உலக வங்கியின் 5ஆவது தவணைக் கொடுப்பனவு கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கைக்கு வழங்கப்பட இருந்தது.
அரசியல் நெருக்கடியினால் இந்த நிதி இலங்கைக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
எமது மண்ணின் தொன்மைக் குடிகள் தாம் என்பதில் தமிழ் மக்கள் உறுதியுடன் உள்ளார்கள் - ஈ.பி.டி.பியின் சர்வ...
அகழ்வு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!
இன்று தேசிய தொல்பொருளியல் தினம்!
|
|