சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு!

கால தாமதமான கடனுதவி தொடர்பிலான கலந்துரையாடலிற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக நாணய நிதியம் வழங்கவிருந்த ஆயிரத்து 500 மில்லியன் டொலர் நிதியின் ஐந்தாவது தவணை கைவிடப்பட்டது. அந்த தொகை ஆறு தவணைகளாக வழங்கப்படவிருந்தது. நான்கு தவணைகளில் 760 மில்லியன் டொலர் தற்போதைய நிலையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது தவணைக்குரிய நிதியை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி இடம்பெறவிருந்தது. எனினும் நாட்டில் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசாங்கம் ஒன்று இல்லாமை காரணமாக அந்த கலந்துரையாடல் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் 300 மில்லியன் டொலரில் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்!
கடந்த 17 நாட்களில் சிறைச்சாலைகளிலிருந்து 7,479 பேர் விடுதலை!
சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்து அறிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
|
|