சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு இந்தியாவின் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மீண்டும் தெரிவிப்பு!-
Wednesday, June 28th, 2023சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு இந்தியாவின் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது என உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகக்குழு ஒன்றுடனான உரையாடல் ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – கடந்த ஆண்டு நெருக்கடியின் போது 4 பில்லியன் டொலர்களை வழங்கி, இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்தது.
இந்தியா அந்த ஆதரவை வழங்கவில்லை என்றால், இலங்கை மிகவும் கடினமான சூழ்நிலைக்கு சென்றிருக்கும் என்றும் மொரகொட தெரிவித்துள்ளார்.
இதில் எந்த கேள்வியும் இல்லை. சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு இந்தியாவினால் மட்டுமே சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த மாதம் இலங்கையின் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணம் குறித்து அவர் சூசகமாக இந்திய ஊடகக்குழு ஒன்றுடனான உரையாடலில் குறிப்பிட்டபோதும், விபரங்களை வெளியிடவில்லை.
சீனாவுடனான இலங்கையின் உறவுகள் மற்றும் கடந்த ஆண்டு நெருக்கடிக்கு சிலர் குற்றம்சாட்டிய ‘கடன் பொறி’ குறித்தும் மொரகொட கருத்துரைத்தார்.
இலங்கையின் ‘கடன் பொறி என்பது, இலங்கையின் செயற்பாட்டால் ஏற்பட்டது என்றும் அதற்கு வேறு எவரும் காரணம் அல்ல என்றும் மொரகொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|