சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, இன்றைய தினம் இலங்கைக்கு வரவுள்ளது.
இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல், இணையவழியில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
அதற்கு முன்னதாக, இலங்கை அதிகாரிகள் குழுவினர், அமெரிக்காவுக்கு சென்று, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்று நாட்டுக்கு வருவதுடன் ஒருவாரம் நாட்டில் தங்கியிருந்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பாடசாலை விடுமுறையை முன்னிட்டு விஷேட புகையிரத சேவை!
இலங்கை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய நாடுகள் சபையுடன் மிக நெருக்கமாக பணியாற்றியுள்ளது - பிரதமர் ...
இந்த வருடத்தின் இறுதிக்குள் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் - தேர்தல்கள் ஆணைக்குழு...
|
|