சர்வதேச நாடுகளின் கொரோனா மரணங்கள் பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தில் – எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களிடம் சுகாதார பகுதியினர் வலியுறுத்து!

Saturday, August 28th, 2021

இலங்கையில் நேற்றையதினமும் கொரோனா தொற்றினால் 214 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30 வயதுக்கு குறைவான 5 பேரும்  30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 58 பேரும்  60 வயதிற்கு மேற்பட்ட 151 பேரும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை புதிதாக 4 ஆயிரத்து 561 பேர், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  4 இலட்சத்து 16 ஆயிரத்து 931 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 3 இலட்சத்து 53 ஆயிரத்து 191 பேர் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்துள்ளனர்.

இதேவேளை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் கொவிட் மரணங்களின் சதவீதமானது, 2.01 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச தரவுகளின் அடிப்படையில், நேற்றைய நாளில் கொவிட் மரணங்கள் பதிவான நாடுகளின் பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தில் உள்ளது.

நேற்றைய நாளில், சர்வதேச ரீதியில் அமெரிக்காவில் அதிக கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் ஆயிரத்து 275 இற்கும் அதிகமான மரணங்கள் அங்கு பதிவானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்துலக ரீதியில் நேற்றையநாளில், 9 ஆயிரத்து 800 இற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, சர்வதேச கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 44 இலட்சத்து 97 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: