சர்வதேச சமூகத்துடன் கைகோர்த்து நாட்டை மீட்டெடுக்கும் துணிச்சலான தலைவர் ரணில் – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் நம்பிக்கை!

Sunday, September 15th, 2024

“சர்வதேச சமூகத்துடன் கைகோர்த்து நாட்டை மீட்டெடுக்கும் துணிச்சலான தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒருவர்தான் என சட்டிக்காட்டிய யாழ். மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா  எமது பொருளாதாரத்துக்கு வெளிச்சம் தந்தவர் அவர்தான் என்றும் அதனால் எமது யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சிலிண்டர் சின்னத்தை வெல்ல வைப்பார்கள் என்பது உறுதி என்றும் தெரிவித்தள்ளார்.

யாழ்ப்பாணம் – நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற ரணிலால் இயலும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்பொது அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டை அவர் பொறுப்பேற்ற போது நாடு வங்குரோத்தடைந்திருந்தது. திறைசேரி காலியாக இருந்தது.

“சர்வதேச சமூகத்துடன் கைகோர்த்து நாட்டை மீட்டெடுக்கும் துணிச்சலான தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒருவர்தான். நாட்டை அவர் பொறுப்பேற்ற போது நாடு வங்குரோத்தடைந்திருந்தது. திறைசேரி காலியாக இருந்தது.

எமது பொருளாதாரத்துக்கு வெளிச்சம் தந்தவர் அவர்தான். எமது யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சிலிண்டர் சின்னத்தை வெல்ல வைப்பார்கள் என்பது உறுதி

நெருக்கடி நிலையிலும் இலவசமான மண்ணெண்ணெய், படகு, வலை என்பவற்றை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தார்.

இதற்கு எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா முன்னின்று செயற்பட்டார். பல இந்துக் கோயில்கள் விடுவிக்கப்பட்டுள்ளதோடு அங்கு சென்று வழிபட வழியமைக்கப்பட்டுள்ளது.

ஏனைய மதத்தவர்கள் சுதந்திரமாக தமது மதத்தை வழிபட ஜனாதிபதி வழியமைத்துக் கொடுத்தார்” என்றும் கூறிய அவர் ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் ரணில் விகரம சிங்கவின் சிலிண்டர் சின்னத்தை வெல்ல வைப்பார்கள் என்பது உறுதி என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


எச்1என்1 நோய்தொற்றுக்கு யாழில் 42பேருக்குச் சிகிச்சை ஆயினும் 9பேருக்கு மட்டுமே பன்றிக்காய்ச்சல்!
வடக்கில் இன்றுமுதல் கள் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி - பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த ...
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பிவைப்பதற்கு பொதுமக்கள...