சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள போதிலும் இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்க முடியாதுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, May 19th, 2020

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள போதிலும் இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனம் பல கோடி ரூபா கடனில் இருப்பதால், எரிபொருட்களின் விலைகளை குறைக்க முடியாதுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் கிடைக்கும் அனைத்து வருவாயும் கடனை செலுத்துவதற்காக அரசாங்கம் பயன்படுத்துவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கு அமைய அரசாங்கத்திற்கு கிடைக்கும் மேலதிக நிதியை விசேட வங்கிக் கணக்கில் வைப்புக்கு செய்து, 200 பில்லியன் ரூபாவை சேமிப்பது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதியை கொண்டு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கடனை செலுத்தி முடிக்க முடியும் எனவும், இதன் பின்னர் எரிபொருள் விலை குறைந்துள்ளதன் பலனை மக்களுக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த வருடத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றங்களுக்கும் செய்யப்பட மாட்டாது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தாலும் இலங்கையில் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கே நாடு முழுவதும் அதிகளவான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இருக்கின்றன.

வேறு நிறுவனங்களிடம் எரிபொருள் விலை அதிகமாக இருக்குமாயின் அந்த நிறுவனத்தில் எரிபொருளை கொள்வனவு செய்யாது அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் எரிபொருளை கொள்வனவு செய்தால், மக்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது எனவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: