சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவு!

Tuesday, March 10th, 2020

சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை குறைந்துள்ளமையை அடுத்து இலங்கையில் எரிபொருள் விலையில் மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் யோசனையை முன்வைக்கவுள்ளார்.

சர்வதேச சந்தை நிலவரப்படி எரிபொருட்கள் விலை 30 வீதத்தினால் குறைந்துள்ளது. ஒபெக் கூட்டணி சிதைந்த பின்னர் சவூதி அரேபியா மற்றும் ரஸ்யாவுக்கிடையிலான விலையில் யுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.இதன் ஒரு கட்டமாகவே எரிபொருள் விலையும் குறைந்துள்ளது.

இது 1991 மத்திய கிழக்கு யுத்தத்தின் போது இருந்த நிலையையும் விட மோசமானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related posts: