சர்வதேசத்தின் உதவிகளை தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்- ரவிநாத் ஆரியசிங்க!

Saturday, September 17th, 2016

சர்வதேச சமூகம் இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கும் என எதிர்பார்ப்பதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 33 ஆவது அமர்வின் மூன்றாம் நாள் அமர்வு நேற்று ஜெனிவாவில் இடம்பெற்றுள்ளது. அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

சில இனவாத சக்திகள், அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக கூறியுள்ள அவர், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளதுடன், அரசாங்கமானது உண்மை, நீதி போன்றவற்றை உறுதிப்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த, பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் அமைப்பின் குழுவினரின் இலங்கை விஜயம் குறித்த அறிக்கையில், இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் பாராட்டப்படிருப்பதாகவும், அந்த அறிக்கையின் சில பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்கனவே அமுல்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் ரவிநாத் ஆரியசிங்க கூறியுள்ளார்.  காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தகவல் அறியும் சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ravinath

Related posts: