சர்வஜன வாக்கெடுப்பு நிடைபெற வாய்ப்பு – அமைச்சர் ராஜித!

உத்தேச அரசியல் அமைப்பு தயாரிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அதனை நிறைவேற்றிக் கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளார் என அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்..
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இதன்படி ஏனைய தேர்தல்கள் நடத்தப்பட முன்னதாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.ஒருவரை மையப்படுத்தியுள்ள அதிகாரங்கள் நாட்டின் ஏனைய மனிதர்களுக்கும் பிரிந்து செல்லக்கூடிய வகையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவோம்.
அரசியல் அமைப்புப் பேரவையில் விமல் வீரவங்சவின் கட்சியைத் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள்.விரைவில் அரசியல் அமைப்பு வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|