சர்வஜன வாக்கெடுப்பு சரத்தை நீக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை!

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் போது சர்வஜன வாக்கெடப்பு குறித்த சாரத்தை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பு உருவாக்கும் காரியாலயம் மற்றும் ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அரசியல் அமைப்புச் சபையில் சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவம் செய்வார்கள்.
இதேவேளை, என்ன காரணத்திற்காக இவ்வாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கும் போது சர்வஜன வாக்கெடுப்பு குறித்த சரத்துக்களை தவிர்க்குமாறு கோரினார் என்பது பற்றி விளக்கம் அளிக்கப்படவில்லை.
தற்போதைய அரசியல் அமைப்பின் சில திருத்தங்களை மேற்கொள்ள மூன்றில் இரண்டு நாடாளுமன்றப் பெரும்பான்மை பலமும், சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|