சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு பதிலாக சர்வகட்சி ஆட்சிமுறை – ஜனாதிபதி ரணிலின் விக்கரமசிங்க முன்மொழிவு!
Saturday, August 6th, 2022சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ரணில் விக்கிரமசிங்க இந்த முன்மொழிவை முன்வைத்தார்.
1941 ஆம் ஆண்டு, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி, எதிர்க்கட்சி நிலையையும் வகித்துக்கொண்டு அமைச்சு பதவியையும் ஏற்றுக்கொண்டது.
இதன்படி முழு நாடாளுமன்றமும் அரசாங்கமாக மாற்றப்பட்டது.. அதே முறையை இலங்கையிலும் செயல்படுத்தலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேநேரம் அவசரகாலச் சட்டத்தை தொடரும் எண்ணம் தமக்கு இல்லையென்றாலும் எதிர்கால பொருளாதார திட்டங்களின்போது அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் ஜனாதிபதி விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
அத்துடன் அமைச்சு பதவிகளுக்கு முன்னுரிமை வழங்காமல் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரச் சுமைக்கு தீர்வுகளை தேடுவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|