சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான யோசனைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு அறிவிப்பு!

Sunday, May 1st, 2022

நாட்டில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான யோசனைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எட்டப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், உரிய முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றவுடன் அனைத்துக் கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்ககது.

இதேவேளை

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்

அத்துடன் எனக்கு பதில் வேறொருவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தால் தான் அதனையும் ஏற்க தயார் என்றும் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை மதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தெரிவித்துள்ளது.

புதிய பிரதமரின் கீழ் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் புதிய அமைச்சரவையை உருவாக்கவும் இணங்கியுள்ளார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: