சர்வகட்சிக் கூட்டத்தில் – 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பான ஆவணம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Saturday, July 22nd, 2023

எதிர்வரும் 26 ஆம் திகதி சர்வக்கட்சி கூட்டத்தை ஜனாதிபதி கூட்டவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பான ஆவணம் முன்வைக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடனான இந்திய விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு நாடு திரும்பிய நிலையில், குறித்த விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 3 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதியுதவி, கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும். வீடுகளை நிர்மாணிப்பதால் மாத்திரம் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது.

எனவே, வீடுகள் அமைக்கப்பட்ட பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை, வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும்.

அதற்கு கல்வியே திறந்த தேர்வாக அமையும் என இந்திய விஜயத்தின்போது தாம் சுட்டிக்காட்டியதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

மலையக பெருந்தோட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்காக 3 ஆயிரம் மில்லியன் ரூபா இந்தியாவால் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

அது கல்வி, சுகாதாரத் துறைக்கு அந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: