சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் குறித்து விசாரணை!

இலங்கை மத்திய வங்கி திறைசேரி முறிகள் தொடர்பான சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் பற்றி நிதியமைச்சு விசாரணை செய்யவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய வர்த்தமானி கோப் விசாரணையில் உள்ளடக்கப்படாதது ஏன் என விசாரிக்க வேண்டுமென்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கஇதன் போது குறிப்பிட்டார். இந்த வர்த்தமானி அறிவித்தல் கோப் குழுவின் பலமாத கால விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர்; கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நிதித் திட்டமிடல் அமைச்சராக அவர் கடமையாற்றிய போது வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பற்றி நிதியமைச்சர் இங்கு கருத்து தெரிவித்தார். இந்த அறிவித்தலானது பொதுக் கடனை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியாளர்கள் எவ்வாறு மோசமாக கையாண்டார்கள் என்பதை காட்டுவதாகவும் அவர் கூறினார்.
Related posts:
|
|