சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் – உதய கம்மன்பில!

குற்றவியல் சட்டத்தில் காணப்படும் இராஜதுரோக குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகவை கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்..
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய யுத்தக் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் சரத் பொன்சேகா உறுதியாக கூறுகின்றார். இந்நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளாக யுத்தக் குற்றச் செயல்களை மறைத்தமைக்காக சரத் பொன்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, குற்றவியல் சட்டத்தின் கீழ் தகவல்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க 13 மாதங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா ஏன் கைது செய்யப்படாமல் இருக்கின்றார் என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது என உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|