சயிட்டம் விவகாரம்: தீர்வு இன்றேல் தொழிற்சங்க போராட்டம்!

Tuesday, February 14th, 2017

சர்ச்சைக்குரிய சயிட்டம் பிரச்சினைக்கு எதிர்வரும் வாரத்தினுள் நியாயமான தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் பொது செயலாளர் நவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

சயிட்டம் நெருக்கடி மற்றும் அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பாக நாட்டில் கருத்தரங்கு ஒன்றை நடத்தி பொதுமக்களுக்கு தெளிவு படுத்த போவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அரச மருத்துவமனைகளில் கறுப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக அவர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் அமைச்சரின் உத்தரவிற்கு அமைய சில மருத்துவமனைகளில் கறுப்புக் கொடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் பொது செயலாளர் நவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

thumb_saitm_malabe_Private_Medical_College

Related posts: